பதிவு செய்த நாள்
29
அக்
2022
09:10
நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோவிலில் 45வது ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ம் தேதி துவங்கியது. முதல் நாள் கணபதி ஹோமம், அபிஷேகம், மகா தீபாராதனை ,
அலங்கார தீபாராதனை உட்பட பல நிகழ்ச்சிகள் நடந்தன. 3ம் நாள் சமய சொற்பொழிவு, நவகிரக நட்சத்திர பூஜை உட்பட பல நிகழ்ச்சிகள் நடந்தன. 4ம் நாளான நேற்று காலை கணபதி ஹோமம், பால்குடம் ரதவீதி பவனி வந்து உற்சவமூர்த்திக்கு அபிஷேகம், மகா தீபாராதனை , திருவிளக்கு பூஜை ,அலங்கார தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று (29ம் தேதி) ருத்ர ஏகாதசினி, தாரா ஹோமம் நடக்கிறது. நாளை (30ம் தேதி) காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 1.45 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சீர் செய்தல், 2 மணிக்கு வேல் வாங்க புறப்படுதல், சுவாமி சூரனை வதம் செய்ய புறப்படுதல், 6.30 மணிக்கு சூரசம்ஹாரம், இரவு 9 மணிக்கு சுவாமி ரதவீதியில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. திருக்கல்யாணம் 31ம் தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாணம், தொடர்ந்து பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து நடக்கிறது.