பதிவு செய்த நாள்
29
அக்
2022
09:10
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் வர சித்தி விநாயகர் திருக்கோயில், 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு விழா இன்று துவங்குகிறது.
விழாவையொட்டி இன்று மாலை, 5.00 மணிக்கு மங்கல இசையும், தொடர்ந்து திருவிளக்கு ஏற்றுதல், புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, மகா சங்கல்பம், வேதிகா அர்ச்சனை, விநாயகர் முதல் கால பூஜை, மங்கள தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரண்டாம் நாளான, நாளை காலை, 7.00 மணிக்கு மங்கள இசையுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, விநாயகர் பெருமானுக்கு அபிஷேகம் வழிபாடு, ஐங்கரன் வேள்வி, திரி சங்கு வழிபாடு, திருவடி விண்ணப்பம், திருசங்கு வேள்விச்சாலையில் இருந்து புறப்படுதல், திருக்குட நன்னீராட்டு திருசங்கு நீராட்டு விழா நடக்கிறது. மதியம், 12.00 மணிக்கு அலங்கார வழிபாடு, பேரொளி காட்சி, திருமுறை விண்ணப்பம், திருநீறு வழங்குதல் தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.