மதுரை: மதுரை, கோச்சடையில் மயில்வேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 4-ம் நாளான நேற்று மூலவர் மயில்வேல் முருகன் மயிலின் மீது அமர்ந்து வேலுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.