பதிவு செய்த நாள்
29
அக்
2022
07:10
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கருமத்தம்பட்டி மற்றும் கருமத்தம்பட்டி புதூர் கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட, ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில்கள் பழமையானவை. இங்கு, திருப்பணிகள் முடிந்து, 25 ம்தேதி காலை, விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. புனித நீர் கலசங்கள் அலங்கரிக்கப்பட்டு, நான்கு கால ஹோமம் பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. 9:30 மணிக்கு, விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்டம், வள்ளி கும்மியாட்டம் கந்தன் காவடி குழுவின் காவடியாட்டம் நடந்தது.
ராசிபாளையம் அத்தனூர் அம்மன்: ராசிபாளையம், அருகம்பாளையத்துக்கு பாத்தியப்பட்ட அத்தனூர் அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில், இரு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.