பதிவு செய்த நாள்
30
அக்
2022
08:10
சபரிமலை: சபரிமலையில் மண்டல காலம் துவங்க இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய தங்குமிடமான நிலக்கல்லில் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரு கின்றன. கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நவ., 17ல் துவங்க உள்ள நிலையில், அரசின் அனைத்து துறைகளும் பக்தர்களுக்கான வசதிகளை செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. போக்குவரத்து துறை சார்பில் நடைபெறும் ஏற்பாடுகளை அமைச்சர் ஆன்டனி ராஜு, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
பின், அமைச்சர் கூறியதாவது: நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு, நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படும். கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 300 பஸ்கள் இயக்கப்படும். மகரவிளக்கு நாளில் பம்பையில் இருந்து 1,000 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழுக்களாக வரும் பக்தர்களுக்கு, குரூப் புக்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு பஸ் இயக்கப்படும். பாதுகாப்பு கருதி ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களில் பக்தர்கள் வருவது தடை செய்யப்படும். பாதுகாப்பு மண்டலம் என்ற திட்டத்தின் கீழ், பக்தர்கள் அவசர காலங்களில் அழைத்த ஏழு நிமிடங்களில், அவர்களின் உதவிக்காக அதிகாரிகள் அந்த இடத்துக்கு சென்றடைவர். இதற்காக மூன்று கட்டுப் பாடு அறைகள் திறக்கப்பட்டு, 24 பறக்கும் படைகள் அமைக்கப்படும். இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுவதால், உரிய முன்னேற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.