சுவாமிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2022 08:11
தஞ்சாவூர், சுவாமிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததால் சிவகுருநாதனாக சிறப்பு பெற்று இத்தலம் விளங்குகிறது.பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 24ம் தேதி தொடங்கியது.
26-ம் தேதி முதல்29-ம் தேதி வரை படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 30ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று 31-ம் தேதி காலை10மணிக்கு சண்முகர் சுவாமி புறப்பாடும், காவிரியில் தீர்த்தவாரியும், இரவு7மணிக்கு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. நவம்பர்1 மற்றும்2-ம் தேதி இரவு7.30மணிக்கு ஊஞ்சல் விழாவும், 3-ம் தேதி இரவு8மணிக்கு தேவசேனா திருக்கல்யாண பல்லக்கு வீதியுலாவும், 4-ம் தேதி இரவு சண்முகசுவாமி யதாஸ்தானம் நடைபெறுகிறது.