சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டது. அக். 25ம் தேதி துவங்கிய கந்த சஷ்டி விழா தொடர்ந்து 6 நாட்கள் நடந்தது. ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடந்தது. 6ம் நாளான அக்.30ம் தேதி இரவு 9:00 மணிக்கு சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பாலமுருகனுக்கு 61 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ராஜ அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.