ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
ரிஷிவந்தியத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குவள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி, தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் கந்தர்சஷ்டி சூரசம்ஹார உற்சவ விழா கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் இரவு சுவாமிவீதியுலா நடந்து வந்தது. கடந்த 30ம் தேதி சூரம்சம்ஹார நிகழ்ச்சி, பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு அபிேஷக ஆராதனைமற்றும் உமாதேவியிடம் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மாலை பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அங்கு சுவாமிக்கு அபிேஷகம் செய்த பிறகு, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.பூஜைகளை சோமு, நாகராஜ் குருக்கள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த சுவாமிவீதியுலாவில், மயில் வாகனத்தில் உற்சவர் சுப்ரமணிய சுவாமி சேவல் கொடி ஏந்தி சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். இடும்பன் பூஜையுடன் விழா நிறைவடைந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.