செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: தீர்த்தக்குடம் சுமந்து பக்தர்கள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2022 01:11
அவிநாசி : அவிநாசி, கைகாட்டிப்புதுார் எக்ஸ்டென்ஷன் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த குடம், முளைப்பாலிகை சுமந்து பக்தர்கள் பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
விழாவில், இன்று கோபுர விமான கலசம் நிறுவுதல், தீர்த்த குட அபிஷேகம், அதனை தொடர்ந்து செல்வ விநாயகருக்கு அஷ்டபந்தனம் சாத்துதல், மாலை யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. வரும் 4ம் தேதி காலை 8:00 மணிக்கு மேல் கோபுர விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை நடைபெறுகின்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர் களுக்கு கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.