கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஆழ்வார்கள் அவதார தின வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2022 03:11
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஆழ்வார்கள் அவதார தின வைபவம் நடந்தது. கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஆழ்வார்கள் அவதார தின வைபவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. சீதேவி, பூதேவி, பெருமாள் உற்சவர்கள் மற்றும் பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் உற்சவர்களுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்தனர். தொடர்ந்து மண்டபத்தில் சுவாமிகளை எழுந்தருள செய்து, சாற்றுமுறை, சேவை, ஆராதன பூஜைகள் நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஆழ்வார்கள் அவதார தின வைபவத்தையொட்டி பெருமாள் தாயார் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தேசிக பட்டர் பூஜைகளை செய்து வைத்தார்.