16ம் நுாற்றாண்டு பெருமாள் சிலை அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2022 01:11
வேலுார் : வேலுார் அருகே, கண்டெடுக்கப்பட்ட, 16ம் நுாற்றாண்டை சேர்ந்த பெருமாள் சிலை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. வேலுார் மாவட்டம், கீழ்மொணவூரில், கால்வாய் வெட்டும் பணி கடந்த மாதம், 3ல் நடந்தது. அப்போது, சிதிலமடைந்த பெருமாள் சிலை ஒன்று கண்டுடெடுக்கப்பட்டது. வேலுார் தாசில்தார் செந்தில், சிலையை கைப்பற்றி நடத்திய ஆய்வில், ஐந்தடி உயரமுள்ள அந்த பெருமாள் சிலை கி.பி., 16ம் நுாற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது. இதையடுத்து அச்சிலையை வேலுார் கோட்டையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காப்பாட்சியர் சரவணனிடம், தாசில்தார் செந்தில் நேற்று ஒப்படைத்தார். இச்சிலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.