மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2022 03:11
மாங்காடு : மாங்காடு, காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு 02:11.2022 புதன்கிழமை அன்று நடைபெற்றது. உண்டியல் திறப்பில் வரப்பெற்ற தொகை ரூ.54,37,013/- (ரூபாய் ஐம்பத்து நான்கு இலட்சத்து முப்பத்து ஏழாயிரத்து பதிமூன்று மட்டும்), தங்கம் எடை 374.000 கிராம், வெள்ளி எடை 753.000 கிராம் காணிக்கையாக வரப்பெற்றது. மேற்படி உண்டியல் திறப்பு திருக்கோயில் பரம்பரை தர்மகர்த்தா டாக்டர் மணலி ஆர்.சீனிவாசன் மற்றும் துணை ஆணையர்/ செயல் அலுவலர் திருமதி பெ.க.கவெனிதா மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட உதவி ஆணையர் ஆ.முத்துரெத்தினவேலு, நிரந்தர உண்டியல்கள் திறப்பு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.