பதிவு செய்த நாள்
03
நவ
2022
03:11
செஞ்சி: மேலச்சேரி சுப்பிரமணியர் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்க உள்ளது. செஞ்சியை அடுத்த மேலச்சேரி மலை மீது உள்ள சுப்பிரமணியர் கோவில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நாளை (4ம் தேதி) நடக்க உள்ளது. இதை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமான சங்கல்பம், கோபூஜை, கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமமும், மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, கும்பஅலங்காரம், கடங்கள் யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜையும், இரவு 9 மணிக்கு சாமி சிலை பிரதிஷ்டையும் நடக்க உள்ளது. நாளை காலை 6.30 மணிக்கு கணபதி பூஜையும், இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூலமந்திர பாராயணம், வேதபாராயணம், 9 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9.30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடும், 10 மணிக்கு கோபுர கலச மகா கும்பாபிஷேகமும், 10.15 மணிக்கு மூலம் மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை மேலச்சேரி கிராம பொது மககள் செய்து வருகின்றனர்.