துாத்துக்குடி சக்தி விநாயகர் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2022 10:11
துாத்துக்குடி: துாத்துக்குடி, மில்லர்புரம் சக்திசுந்தர விநாயகர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவில் முருகன், தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது.
துாத்துக்குடி மில்லர்புரம் சக்தி சுந்தர விநாயகர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக நடந்தது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக முருகபெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரசாதங்கள் பெற்றுச்சென்றனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் புரவலர் ஷியாம்குமார், நிர்வாகத்தலைவர் காந்திராஜன், செயலாளர் குருநாதன், பொருளாளர் கவுன்சிலர் பொன்னப்பன், மற்றும் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.