பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் முரளீதர சுவாமி 61 வது திருநட்சத்திர விழா, ராதை கிருஷ்ணர் 5ம் ஆண்டு பிரதிஷ்டா தினம் உற்சவவிழா, கோவிந்த பட்டாபிஷேகத்துடன் துவங்கியது. உலக நன்மை வேண்டி நடந்த மகா மந்திர கூட்டு பிரார்த்தனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக சுவாமிக்கு மங்கல திரவிய பொருட்களால் விசேஷ திருமஞ்சனம் நடந்தது. கோவிந்தா பட்டாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு வீட்டில் வளர்ப்பதற்கு துளசி செடி பிரசாதம் வழங்கப்பட்டது.