பரமக்குடி: பரமக்குடியில் உள்ள சிவன் கோயில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், நேற்று மாலை சனி பிரதோஷ விழாவையொட்டி பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து ரிஷப வாகனம் கோயில் பிரகாரங்களில் சுற்றி வந்தது. பின்னர் நம்பிக்கை வெள்ளி கவசம் சாற்றி தீபாராதனைகள் நடந்தன. பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்து, வெள்ளிக்கவசம் சாற்றி, பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயில் பிரகாரங்களில் சுவாமி சுற்றி வந்தார். மேலும் எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில், நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.