பதிவு செய்த நாள்
07
நவ
2022
04:11
அவிநாசி: அவிநாசி அடுத்த நம்பியம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பனப்பாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர் மாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கடந்த 4ம் தேதி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 500க்கும் மேற்பட்ட பெண்கள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்டவைகளுடன் முதல் கால யாக பூஜைகளும், ஞாயிறன்று இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜையில் பூத சுத்தி வழிபாடு திரவ்யயாகம், வேதிகார்ச்சனை, நடைபெற்று கோபுர கலசங்கள் வைத்தல் மாலையில் லலிதா சகஸ்ரநாமம், பூர்ணாகுதி, தீபாராதனை உள்ளிட்டவைகள் நடைபெற்று அஷ்டபந்தன மருந்து சாற்றி சுவாமி சிலை பிரதிஷ்டி செய்தல் நடைபெற்றது. இதனையடுத்து, நேற்று காலை நான்காம் கால யாக பூஜையில் மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ரா தானத்துடன் சித்தி விநாயகர், மாரியம்மன் விமானத்துக்கு, ஓதிமலை ஆண்டவர் அர்ச்சக ஸ்தானீகம் சண்முக சுப்பிரமணிய சிவாச்சாரியார், கணபதி ராஜா சிவம் தலைமையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தச தரிசனம், மஹாபிஷேகம், அலங்கார தீபாரதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. மஹா கும்பாபிஷேக விழாவினையடுத்து பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.