மயிலாடுதுறை : செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ருத்ராபிஷேகம் நடைபெற்றது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூரில் வாள்நெடுங்கண்ணி சமேத தான்தோன்றீஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. சோழமன்னர்களின் ஒருவரும் அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவருமான கோச்செங்கட்சோழ மன்னனால் அமைக்கப்பட்ட மாடக்கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் சுவாமி தானாகதோற்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. சிறப்புலிநாயனார் பிறந்து வளர்ந்து வாழ்ந்து சிவபெருமானை வழிபட்டு முக்திஅடைந்த தலமாக விளக்கும் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் இன்று ருத்ராபிஷேகம் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் ஆவாகனம் செய்யப்பட்டு 13 கடங்கள் வைத்து சிவாச்சாரியார்கள், சாஸ்திரிகள் ருத்ரஜபம், பாராயணம் செய்தனர். 108 மூலிகை பொருள்கள் கொண்டு ருத்ரஹோமம் பூர்ணாஹூதி நடைபெற்றது. பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் புறப்பட்டு கோயிலை வலம்வந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. அன்பேசிவம் ருத்ராபிஷேக அறக்கட்டளை சார்பில் எட்டாவது ஆண்டாக நடைபெற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.