வத்திராயிருப்பு: கூமாபட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. நேற்று அதிகாலை அம்மன் தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் நடந்தபின், காலை 6:30 மணிக்கு திரளான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளில் வலம் வந்து, மதியம் 12:30 மணிக்கு தேர் நிலையம் அடைந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி, அம்மனை வழிபட்டனர். மாலையில் மஞ்சள் நீராட்டு நடந்தது. இரவில் அம்மன் பக்தர்களுக்கு பிரியா விடை கொடுத்தபின், அம்மன் சிலை கரைப்பு நடந்தது. டி.எஸ்.பி.,சபரிநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.