ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், திருவோண திருக்கல்யாண உற்சவம் நாளை நடக்கிறது. நாளை காலை, 6.30க்கு, கஸ்தூரி அரங்கநாதருக்கு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனையும், சிறப்பு வழிபாடு, நடக்கிறது. மாலை, 6.30 மணிக்கு, கஸ்தூரி அரங்கநாதர் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. உதவி ஆணையர் வில்வமூர்த்தி, செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.