இருகூர் வெள்ளேரி அங்காளம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2022 07:11
கோவை : இருகூர் வெள்ளேரி அங்காளம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழாவில் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் அங்காளம்மனை வழிபட்டனர். கோவை மாவட்டம் இருகூர் வெள்ளேரி அங்காளம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.நான்கு கால வேள்வி பூஜை உடன் தொடங்கிய விழாவானது இன்று காலை வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு தீர்த்த நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் நடத்தி வைக்க, காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள், முன்னின்று நடத்தினார். பின்னர் தீர்த்த நீரானது அனைத்து பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டு அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் அங்காளம்மனை வழிபட்டனர். இதில் எம் எல் ஏ வி பி கந்தசாமி இருகூர் பேரூராட்சி தலைவரும் திமுக செயற்குழு உறுப்பினர் சந்திரன், முக்கந்தர் மோகனசுந்தரம் மற்றும் விழா கமிட்டினர் கலந்து கொண்டனர்.