தியாகதுருகம்: தியாகதுருகம் ஆதி கங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தியாகதுருகம் பாப்பான் குல தெருவில் உள்ள ஆதி கங்கை அம்மன் கோயில் பக்தர்கள் முயற்சியால் திருப்பணிகள் நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழாவின் துவக்கமாக 11ம் தேதி கணபதி பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து யாகசாலை பூஜை பூர்ணாஹூதி, அஷ்டபந்தன சாற்றுதல், உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இன்று காலை கடம் புறப்பட்டு கோயிலை வலம் வந்து மூலவர் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் அலங்காரமும் செய்து மகா தீபாதாரணை நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இரவு சர்வ அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது.