பதிவு செய்த நாள்
21
நவ
2022
08:11
தி.மலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் புதுப்பிக்கப்பட்ட, சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் ரத்து செய்யப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா, வரும், 27 ல், கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவின் விழாவின் ஏழாம் நாளில், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்கும். அப்போது வீதியுலா வரும், சுப்பிரமணியர் தேர் பழுதடைந்து இருந்ததால், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி நடந்தது. பணி முடிந்த நிலையில், நேற்று வெள்ளோட்டம் நடப்பதாக இருந்தது. முன்னதாக தேரின் உறுதி தன்மை குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தனர். இதில் பீடத்துக்கு ஏற்ப தேரின் உயரம் அமையாமல், கூடுதல் உயரத்துடன் அமைக்கப்பட்டிருந்ததால் உயரத்தை குறைக்க அறிவுறுத்தினர். இதனால் நேற்று நடக்கவிருந்த தேர் வெள்ளோட்டம் நிறுத்தப்பட்டது. சீரமைத்து நாளை மறுதினம் (23ம் தேதி) வெள்ளோட்டம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.