தொலையாத பாவமும் தொலையும் இடம் ராமேஸ்வரம். மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் பெயர் பெற்றது. கோயில் முன்புள்ள அக்னிதீர்த்த கடலில் நீராடிவிட்டு, கோயில் பிரகாரத்தில் இருக்கும் தீர்த்தங்களில் நீராடவேண்டும். முதலில் அனுமன் பூஜித்த விஸ்வலிங்கத்தையும், பின் ராமர் வழிபட்ட ராமலிங்கத்தையும் வழிபடவேண்டும் என்பது நியதி.