காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கார்த்திகை மாத திங்கட்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயிலில் வருடாந்திர சிவராத்திரியின் போது கூட்ட நெரிசல் இருப்பது போல் இன்று (திங்கட்கிழமை) பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அலைமோதினர் .சாதாரணமாக கார்த்திகை மாதத்தில் சிவன் கோயில்களில் தீபங்கள் ஏற்றி வழிபட்டால் நல்லது என்றும் சிறப்பு என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்கு பஞ்சபூத தலங்களில் வாயுத்தலமாகவும் சுயம்புவாகவும் வீற்றிருக்கும் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் கோயில் முழுவதும் நிரம்பி வழிந்தன. சாதாரணமாகவே கோயிலில் வார இறுதியை தொடர்ந்து திங்கட்கிழமைகளிலும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரனைப் பூஜைகளில் கூடுதலான பக்தர்கள் ஈடுபடுவது வழக்கம். அதிலும் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். மேலும் பக்தர்கள் கோரிய பக்தர்கள் அனைவருக்கும் அபிஷேக சேவையில் ஈடுபட அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டிருந்தனர். கோயில் கோயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் ஸ்ரீ காளஹஸ்தி நகரில் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் ஏராளமானோர் காணப்பட்டனர். அதிலும் கோயில் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றின் அருகில் "ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா" என்ற சிவ நாம ஸ்மரனத்தோடு பக்தர்கள் வழிப்பட்டனர். அதிகாலையில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசன்னாம்பிகை தாயாரையும் தரிசனம் வந்தவர்களை கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு மற்றும் அதிகாரிகள் அதிகாலை 5 மணி முதல் கோயில் வளாகத்தில் உள்ள வரிசைகளில் (பக்தர்களை) சீர்படுத்தி விரைவாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஸ்ரீ காளஹஸ்தி மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வந்ததோடு கோயிலின் பிக்ஷால கோபுரம் அருகில் இருந்து கோயிலுக்குள் நுழை வாயிலில் உள்ள வண்ண கோபுரம் வரை தீபங்களை ஏற்ற கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து பெண் பக்தர்கள் நெய் தீபங்கள் மா விளக்கு எலுமிச்சை விளக்கு போன்றவற்றை ஏற்று வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.