கோவை : மாதம்தோறும் வரும் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று கோவை ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் உள்ள ஸ்ரீ ஆபத்சகாய வில்வேஸ்வரருக்கு புஷ்பம், மற்றும் வில்வம் இலையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
*கார்த்திகை சோமவாரம் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கோவை ராம்நகரில் உள்ள விஎன்.தோட்டம் பகுதியில் உள்ளமங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.