பதிவு செய்த நாள்
23
நவ
2022
04:11
வாலாஜாபாத்: வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜய்குமார் 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் மற்றும் கல்வெட்டு குறித்து கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், ஊத்துகாடு கிராமத்தில், பெரியாண்டவர் கோவில் உள்ளது. மூலவர், பெரியநாயகி சமேத பெரியாண்டவர் சிலைக்குமுன் , பலி பீடத்தை ஒட்டி ஒரு சதிகல் உள்ளது. இந்த கல்லில், ஆண், பெண் இருவரும், நின்று கொண்டிருக்கும் சிற்பம் உள்ளது. ஆண் சிற்பத்தின் இடையில், குறுவாளும், கழுத்தில் ஆபரணங்கள், காதில் குண்டலங்கள் மற்றும் கொண்டை தலையுடன் காண முடிகிறது. பெண் உருவத்தில், இடது புறத்தில் கொண்டையும், கழுத்தில் ஆபரணங்கள் என காணமுடிகிறது. 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சிலையாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதே கோவில் கருவறை பின்புறம், ஒரு கல்வெட்டு உள்ளது. இதில், ராட்சத ஆண்டு தை மாதம் முதல் தேதி செட்டியார் ஒருவர் தானம் அளித்ததை குறிப்பிடுகிறது என, உதவி கல்வெட்டாளர் நாகராஜன் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ், பிரசன்னா ஆகியோர் உறுதிபடுத்தி உள்ளனர். நீர் நிலை உருவாக்குவதற்கு தன் தலையை தானே கொய்துக்கொண்ட இளைஞன் குறித்து, கல்வெட்டு செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.