பதிவு செய்த நாள்
23
நவ
2022
05:11
ஊத்துக்கோட்டை: சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், மழையையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஆரணி அடுத்த, சிறுவாபுரியில் உள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு செவ்வாய் மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமியை தரிசனம் செய்வர். இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை ஆனதால், காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. காலை 10:00 மணிக்கு திடீரென மழை பெய்தது. ஆனாலும், பக்தர்கள் கொட்டும் மழையிலும் கோவிலுக்குள் சென்றனர். அங்கு நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர்.