சந்திரன் பூஜித்து சாபநிவர்த்தி பெற்ற ஓர் தலமே சோமநாதீஸ்வரர் கோயில். காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தில் உள்ள இக்கோயில் சோழர்களின் கைவண்ணத்தில் உருவானது. அதுவும் குலோத்துங்கச் சோழன் கஜபிருஷ்ட விமான அமைப்போடு அமைத்த கோயில். தன் சாபம் தீர இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளார் சந்திரன். அதனால் இங்குள்ள ஈசனுக்கு ‘சோமநாதர்’ என்ற பெயர் ஏற்பட்டது. அம்பிகை காமாட்சி எனும் நாமத்தோடு காட்சி தருகிறாள். சந்திரன் இங்கு தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். சந்திராஷ்டமத்தால் சிரமப்படுபவர்கள், எப்போதும் ஒருவித பயத்தால் அவதிப்படுபவர்கள் தரிசிக்க வேண்டிய கோயில் இது. திங்கட்கிழமை, பவுர்ணமி நாளில் இங்கு வந்தால் உங்களுக்கு மனபலம் கூடும். சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து 33 கி.மீ., துாரத்தில் கோயில் உள்ளது.