* உனது நாக்கை கட்டுப்படுத்தினால் வாழ்வு நலமாகும். * உன்னிடம் பேராசை இல்லையென்றால் சுதந்திரப் பறவையாக வாழலாம். * பொருள் இல்லாதவன் ஏழை அல்ல. பேராசை உள்ளவேனே உண்மையான ஏழை. * பிறருக்கு அறிவுரை வழங்குவதைவிட, பயனுள்ள செயலில் ஈடுபடு. * வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளில் இருந்து பாடம் கற்றுக்கொள். * கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் மனித சமுதாயம் விலங்குகளின் காடாக மாறி விடும். * நல்லதை பார்க்கவும், செய்யவும் விரும்புங்கள். * மனிதனையும், கடவுளையும் இணைக்கும் பாலமே வழிபாடு. * தங்கத்தின் மூலம் பல அணிகலன் செய்யலாம். அதுபோல் பல கடவுள் இருந்தாலும் உணர்த்தும் தத்துவம் ஒன்றே. * கடவுளுடன் பேசுவது வழிபாடு. கடவுள் பேசுவதைக் கேட்பது தியானம். * மனதில் ஆன்மிக சிந்தனை அதிகரித்தால் கவலை மறையும். * கடவுளின் படைப்பு ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. * பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அதையே நாமும் பிறருக்கு செய்ய வேண்டும். * மனதில் ஆசை எழுந்தால் அது நியாயமானதுதானா என்று யோசி. * உணவை வீணாக்காதே... அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும். * சொல்வது யாருக்கும் எளிது. ஆனால் வாக்களித்த படி நடப்பது கடினம். * அன்பே சிறந்த முதலீடு. அதை எவ்வளவு முதலீடு செய்கிறோமோ அந்த அளவிற்கு நல்லது. * தண்ணீர் குளிர்ச்சியை இயல்பாக கொண்டிக்கும். அதுபோல மனிதனுக்கு அன்பே இயற்கையானது. * சாப்பிடுவதற்காக உயிர் வாழ்வது கூடாது. உயிர் வாழ்வதற்காக மட்டுமே சாப்பிட வேண்டும். * எந்த பொருளும் அழிவதில்லை. அது வேறொன்றாக மாறிக் கொண்டேயிருக்கிறது.