பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2022 10:11
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா 8 நாட்கள் நடக்கிறது.
விழாவானது நவ., 22 ல் துவங்கி, 29 வரை நடக்க உள்ளது. இதன்படி ஒவ்வொரு நாளும் கோயில் சிப்பந்திகள், சிவாச்சாரியாளர்கள் மற்றும் பணியாளர்கள் என பூஜைகளை நடத்தி வருகின்றனர். தினமும் இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. நவ., 29 அன்று இரவு தேவஸ்தானம் சார்பில் அபிஷேக, ஆராதனைகள் மற்றும் பொங்கல் படையல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த 8 நாட்களில் கோயிலில் பொங்கல் வைத்தல் மற்றும் முடி இறக்குதல் உள்ளிட்ட பிரார்த்தனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.