தம்பதியராகப் போவதுதான் விசேஷம். ஆணாக இருந்தால் மனைவி, பெண்ணாக இருந்தால் கணவன் கையைப் பிடித்து நீராட வேண்டும். கணவனோ, மனைவியோ இல்லாதவர்கள் மகன் கையைப் பிடித்து நீராட வேண்டும். மகனும் இல்லாதவர்கள் பசுமாட்டின் வாலைப் பிடித்து ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே வயதாகட்டுமே என காத்திராமல், இளமையிலேயே காசிக்கு சென்று வருவது மிகமிக நல்லது.