பதிவு செய்த நாள்
25
நவ
2022
10:11
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தனிச் சன்னதியில் அருள்பாளிக்கும் பைரவருக்கு 20 ஆம் ஆண்டு சம்பக சஷ்டி விழா அனுக்கையுடன் துவங்கியது.
இதன்படி நவ., 23 அன்று இரவு 7:00 மணி முதல் சித்தி விநாயகர் சன்னதியில் அனுக்கை நிறைவடைந்து, சுவாமி, அம்பாள் மற்றும் பைரவருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து நேற்று இரவு 8:00 மணிக்கு பைரவர் சிறப்பு அபிஷேகம் நிறைவடைந்து, விபூதி காப்பு சாற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. இதேபோல் தினமும் பச்சை சாத்தி, சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, மற்றும் வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ தீபாராதனைகள் நடக்கும். நவ., 29 காலை 6:00 மணி முதல் ஸ்ரீ சம்பக சஷ்டி ஓம் அதி சந்துஷ்ட பைரவ யாகம் நடக்கிறது. மறுநாள் சந்தன காப்பு, அஷ்ட வித்தியார்ச்சனை, நவ., 30 அன்று வெள்ளிக்கவசம் சாற்றி, பாவாடை நைவேத்தியம் செய்யப்பட்டு பகல் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். அன்று இரவு மாலை 6:00 மணிக்கு அர்த்தநாரீஸ்வரி அலங்காரம், திருவிளக்கு பூஜை நடக்க உள்ளது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், ஆயிர வைசிய சபை, விழா குழுவினர் செய்துள்ளனர்.