பட்டிவீரன்பட்டி: சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற உள்ளதால் பாலாலயம் நடந்தது.
இக்கோயில் 200 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் உள்ளார். கோயில் மிகவும் சேதம் அடைந்ததால் உற்சவர் சிலையை மட்டுமே வைத்து பூஜைகள் நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக இக்கோயிலை புனரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்த னர். இந்து சமய அறநிலைத்துறைக்கு கீழ் உள்ள கோவில் என்பதால் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி கிடைப்பது தாமதமானது. சில நாட்களுக்கு முன் அதற்கான அனுமதி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக பணிகளை துவங்குவதற்காக கோயிலில் பாலாலயம் நடந்தது. அறநிலைத்துறை கோயில் ஆய்வாளர் காசி மணிகண்டன் உதவி ஆய்வாளர் மகேஸ்வரி செயல் அலுவலர் கனகலட்சுமி பங்கேற்றனர். விழா கமிட்டியை சேர்ந்த முருகன் மூர்த்தி கண்ணன் சுதாகர் புகழேந்தி சந்திரசேகர் பங்கேற்றனர். கோயில் அர்ச்சகர் ராஜ நரசிம்மன் ஏற்பாடுகளை செய்திருந்தார். நூறாண்டுகளுக்கு பிறகு கோயிலில் கும்பாபிஷேகம் நடப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.