ஆற்று தீப வழிபாடு: தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2022 10:11
புதுச்சேரி: ஏனாம் பிராந்தியத்தில் ஆற்றில் தீபம் ஏற்றி விடிய விடிய வழிபாடு நடந்தது.
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநில கோதாவரி ஆற்றையொட்டி இருக்கிறது. கார்த்திகை மாத அமாவாசையான நேற்று முன்தினம் இரவு சிவபெருமானை வழிபடும் சிறப்பு பூஜை நடந்தது. அங்குள்ள ராஜிவ் கடற்கரையில் கோதாவரி ஆற்று பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் தீபம் ஏற்றி ஆற்றில் விட்டு சிவபெருமானை வழிபட்டனர். விடியற்காலை வரை விடிய விடிய தீபம் ஏற்றும் நிகழ்வு நடந்தால் ஆற்றக்கரை களைகட்டியது. ஆண்டுதோறும் இவ்விழாவை மக்கள் சாதி-மத பேதமின்றி ஒரே இடத்தில் கூடி வழிபடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.