கோயில்களில் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2012 02:08
பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வதை நம்மை நாமே உற்சாகப் படுத்திக் கொள்ளும் ஒரு மருந்தாக பெரியோர்கள் வகுத்துள்ளனர். அதாவது எல்லாவற்றையும் சுவாமியிடம் சொல்லிவிட்டோம் என்ற ஆறுதல்.. அதே நேரம், பெயர் நட்சத்திரம் சொல்லி நமது வேண்டுகோள்களையெல்லாம் கேட்டால் தான் நன்மை உண்டாகும் என்றில்லை. வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ என்கிறார் மாணிக்கவாசகர். நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும். நாம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இன்பமும் துன்பமும் இறையருளால் நிகழ்கின்றன. ஸ்ரீகிருஷ்ணர் கடமையைச் செய், பலனை எதிர்பாராதே, உன் வாழ்க்கை நலனுக்கு நான் பொறுப்பேற்றுள்ளேன், என்று அருளியிருக்கிறார்.