சாத்துார்: சாத்துார் சடையம்பட்டி சீரடி சாய்பாபா கோயில் 8ம் ஆண்டு வருடாபிஷேகம் நடந்தது. நவம்பர் 23ல் காலை 6:00 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நவம்பர் 24 காலை 10:45 மணிக்கு கோபுர கலசாபிஷேகம், சாய்நாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு பகல் ஆரத்தியும் சிறப்பு அன்னதானமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள விழாவில் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.