கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் கார்த்திகை சனி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2022 09:11
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் கார்த்திகை 2வது சனிக்கிழமை பூஜை நடந்தது.
இதையொட்டி கதிர் நரசிங்க பெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவி அம்மன், மூலவர் ராமானுஜர் சுவாமிக்கு திருமஞ்சனம், விஸ்வரூப பூஜைகள் மற்றும் அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. பின் புத்தாடை அணிவித்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் பூஜைகள் நடந்தது. இதில் கோபால்பட்டி, சாணார்பட்டி , அதிகாரிபட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.