பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறையில் அமைந்துள்ள அருள்மிகு செந்தில் ஆண்டவர் கோயிலில் அருள் பாலிக்கும் பைரவருக்கு சம்பக சஷ்டி விழா நடக்கிறது.
இக்கோயிலில் கடந்த மூன்று நாட்களாக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது மூன்றாம் நாளான நேற்று சுவாமி சிகப்பு சாத்தி அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து இன்று வெள்ளை சாதி அலங்காரமும் சிறப்பு தீபாராதனை நடக்க உள்ளது. *பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நேற்று காலை சிறப்பு ஹோமங்கள் நடந்து, மகா பூர்ணாகுதி நிறைவடைந்தது. பின்னர் தீர்த்த குடம் புறப்பாடாகி சுவாமி சன்னதியில் வலம் வந்து பைரவருக்கு அபிஷேகம் நடந்தது. மாலை சுவாமி சிகப்பு சாத்தி அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.