நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2022 05:11
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவிலில் கார்த்திகை சோமவார 1008 சங்காபிஷேகம் நடந்தது.
மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு பன்னீர், சந்தனம், பால் , பழம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு திரவிய அபிஷேகம் நடந்தது. காலை 108 சங்கு மற்றும் மலர்களால் தாமரையில் சிவன் இருப்பது போல் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. மாலை 1008 சங்குகள் மற்றும் வெள்ளியால் ஆன சங்கு, நெல் , பல வண்ண மலர்களைக் கொண்டு கோவில் வளாகத்தில் சிவலிங்க வடிவில் அலங்கரிக்கப்பட்டது. அதன் முன் சிறப்பு யாக பூஜை மற்றும் சங்காபிஷேகத்தை வெங்கட்ராமன் ஐயர் செய்தார். இதில் செந்துறை, நத்தம், கோபால்பட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கைலாசநாதரை தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.