பதிவு செய்த நாள்
29
நவ
2022
04:11
திருப்பூர்: திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் ரோட்டில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவில், 10ம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, காலை, 9:00 மணிக்கு வேள்வி பூஜைகள் துவங்கியது; தொடர்ந்து, 108 சங்காபிஷேகம், பாலாபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. ஷீரடி சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம், 12:00 மணிக்கு சிறப்பு ஆரத்தி பூஜையும், தொடர்ந்து, சிறப்பு பஜனையும் நடந்தது. அவிநாசி வாசீகர் மடாலயம் காமாட்சி தாசசுவாமி தலைமையிலான குழுவினர், ஆண்டு விழா பூஜைகளை நிகழ்த்தினர். விழாவையொட்டி, பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, திருப்பூர் ஸ்ரீஷீரடி சாய் பீடம் அறக்கட்டளை செய்திருந்தது.