மேட்டுப்பாளையம்: வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில், சங்கு அபிஷேக பூஜை நடந்தது. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளிங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. இங்கு கார்த்திகை மாதம், இரண்டாம் திங்கள் கிழமையை முன்னிட்டு, வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு, 108 சங்கு அபிஷேக பூஜையும், வேள்வி வழிபாடும் நடைபெற்றது. காலை, 9:00 மணிக்கு தொடங்கிய இந்த அபிஷேக பூஜை, மதியம், 12:00 மணிக்கு நிறைவடைந்தது. இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு பூஜை அடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சங்கு பூஜையை பூசாரி ஜோதி வேலவன் செய்தார்.