திருப்புத்தூர் பைரவத் தலங்களில் கோயில்களில் சம்பக சஷ்டி விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2022 08:11
திருப்புத்தூர்: திருப்புத்தூர் மற்றும் ந.வைரவன்பட்டி கோயில்களில் நேற்று சம்பக சஷ்டி விழா நிறைவடைந்தது. பைரவத் தலங்களில் அந்தகாசூரன், சம்பகாசூரன் ஆகியோரை வயிரவர் சூரசம்ஹாரம் செய்ததை சம்பக சஷ்டி விழாவாக கொண்டாடுகின்றனர். திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா நவ.24 ல் துவங்கியது. தினசரி காலை,மாலை அஷ்ட பைரவர் யாகம் நடக்கு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று மாலை 5:30 மணிக்கு ரமேஷ் குருக்கள் தலைமையில் 12ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் கலசங்கள் புறப்பாடாகி மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் விழா நிறைவடைந்தது. ந. வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில் வயிரவ சுவாமிக்கு தினசரி மாலை அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை வழிபாடு நடந்தது. 5 ம் நாளில் சுவாமி விடுதிக்கு எழுந்தருளி சாயரட்சை பூஜைகள் நடந்து, சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளினார். நேற்று இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்து சம்பகாசூரனை வதம் செய்ய முயன்றதும், வெள்ளி ரதத்தில் எழுந்தருளிய வயிரவர் சம்பகாசூரனை வதம் செய்ததுடன் விழா நிறைவடைந்தது.