பதிவு செய்த நாள்
02
டிச
2022
07:12
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் கார்த்திகை மாத கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு, நேற்று 1ம் தேதி முன்னை முதல்வன் வழிபாடு, நிலமகள் வழிபாடு, திருமண் எடுத்தல், முளைப்பாரிகையிடுதல் நடந்தது.
இன்று (2-ம் தேதி) ஐம்பெருங்கடவுளர்கள் காட்சியும், காலை கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மங்களவாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்தின் போது உற்சவரான சோமஸ்கந்தர்,கிரிகுஜாம்பிகையுடன் சிறப்பு அகலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தனர். தொடர்ந்து 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும், 10ம் தேதி காலை 7.30 மணி முதல் 8.45 மணிக்குள் திருத்தேரோட்டமும், மாலையில் ஆடவல்லான் புறப்பாடும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி வரும் 11ம் தேதி காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் புறப்பாடும், தொடர்ந்து மதியம் 2 மணிக்கு சூரிய புஷ்கரணி திருக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 12-ம் தேதி விடையாற்றியும், இரவு புஷ்ப பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறுகிறது.