பதிவு செய்த நாள்
03
டிச
2022
04:12
அன்னூர்: நீலகண்டன்புதூர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கஞ்சப்பள்ளி ஊராட்சி, நீலகண்டன் புதூரில், செல்வ விநாயகர் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை விநாயகர் வழிபாடுடன் துவங்கியது, முதற்காலயாக பூஜை, எண் வகை மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று அதிகாலையில் இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை 6:30 மணிக்கு செல்வ விநாயகர், விநாயகர், நாகர் மூஷிகம், பலிபீடம் ஆகியவற்றுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை, கோ பூஜை நடந்தது, வேத சிவாகம திருமுறை பாராயணம் செய்யப்பட்டது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.