பதிவு செய்த நாள்
04
டிச
2022
12:12
அனுப்பர்பாளையம்: திருப்பூர் அடுத்த தொரவலூர் ஊராட்சியில், அமைந்துள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று 4 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5:30 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் நடக்கிறது.
விழாவையொட்டி, நேற்று 3 ம் தேதி சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு சிவாச்சாரியார் வழிபாடு, இரண்டாம் கால யாக வேள்வி, ஆதிவாச பூஜைகள், திரவியயாக வேள்வி, பூர்ணாகுதி, தீபாரதனை, பிரசாதம் வழங்குதல், தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, திரவிய யாக வேள்வி, பூர்ணாகுதி, தீபாரதனை, பிரசாதம் வழங்குதல், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று 4 ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாக வேள்வி, அங்காளம்மனுக்கு நாடி சந்தானம், உயிர் ஊட்டுதல், திரவிய யாகம் நிறை பூர்ணாகுதி, தீபாரதனை, யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு, 5:30 மணிக்கு அங்காளம்மன் கோபுர கலச மகா கும்பாபிஷேகம் தொடர்ந்து பரிவாரம் மூர்த்திகளுடன் அங்காள பரமேஸ்வரிக்கு அம்மன் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 10:00 மணிக்கு மஹா அபிஷேகம், தசதானம், தசதரிசனம், மஹா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெறுகிறது. முன்னதாக காலை 7:00 மணி முதல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோட்டை முனியப்பன் சேவா அறக்கட்டளை, ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சேவா அறக்கட்டளை, ஊர் பொதுமக்கள், ஆகியோர் செய்துள்ளனர்.