சின்னாளபட்டி கோயில் விழாவில் மார்பில் கத்தி போட்டு நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2022 05:12
சின்னாளபட்டி: சின்னாளபட்டி கோயில் விழாவில், இளைஞர்கள் மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்தனர்.
சின்னாளபட்டி நடூரில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் விழாவில், மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்வது பிரசித்தி பெற்றது. இக்கோயில் கும்பாபிஷேகம், 2 நாட்களுக்கு முன் நடந்தது. விழாவை தொடர்ந்து, அம்மனை பிருந்தாவன தோப்பில் இருந்து அழைத்து வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக கோயில் கமிட்டி சார்பில் ஜமீன்தார் துரை பாண்டியன் மாக்காள நாயகருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அவர் வழங்கிய குதிரையை பிருந்தாவன தோப்பிற்கு மேளதாளத்துடன் அழைத்து வந்தனர் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனை, கத்தியில் பூ சுற்றி, அதில் காதலை கருகமணி வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். குதிரை வாகனத்தில் கோயில் நோக்கி கரக ஊர்வலம் நடந்தது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், சவுடம்மா தீசுக்கோ என்ற கோஷத்துடன், மார்பில் கத்தி போட்டு படி அழைத்து வந்தனர். பின்னர் சக்தி நீர் அழைப்பு நடந்தது. அம்மனுக்கு ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை திருவிளக்கு வழிபாடு, அன்னதானம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.