போடி பரமசிவன் கோயில் மகா கார்த்திகை தீபத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2022 04:12
போடி: தென் திருவண்ணாமலை என போற்றப்படும் போடி பரமசிவன் மலைக்கோயிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் திருவிழா நேற்று நடந்தது.
தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் போடி பரமசிவன் மலைக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழா சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை குழு குருநாதர் சுருளிவேல் தலைமையில் நடந்தது. தலைவர் ஜெயராமன், செயலாளர் குமார், துணைத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். போடியில் இருந்து பார்த்தால் ஜோதி தெரியும் படி 171 கிலோ எடையுள்ள திரிமூலம் 702 லிட்டர் நெய் ஊற்றி அரோகரா கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது. முருகன், லட்சுமி நாராயணனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர்.
* போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச் சொக்கநாதர் கோயில், மேலச்சொக்கநாதர் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.
* போடி சுப்பிரமணியர் கோவில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் தீபாரதனைகள் நடந்தது.