செஞ்சி அபிதகுஜலாம்பாள் சமேத அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமமும், அருணாச்சல ஈஸ்வரர், அபிதகுஜாம்பாள் மற்றும் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்து கொடியேற்றம் நடந்தத. அன்று இரவு 7 மணிக்கு ருத்ர ஹோமம் மற்றும் உற்சவர் கோவில் உலா நடந்தது. நேற்று இரவு பைர ஹோமமும், இரவு உற்சவர் கோவில் உலா நடந்தது. நேற்று காலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றினர். இதில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, திருப்பணிக்குழு தலைவர் இந்திரா ரவிச்சந்திரன் மற்றும் கார்த்திகை தீப விழா குழுவினரும், நுாற்றுக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையுடன் சாமி வீதி உலா நடந்தது.