சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2022 05:12
காங்கேயம்: காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.
தமிழர் தமது இல்லங்களிலும், கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். இதனை முன்னிட்டு சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது, 6:00 மணிக்கு விழா பூஜை நடந்தது, 8:30 மணிக்கு காலசாந்தி பூஜை நடந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படட்டது. மாலை 4:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது, தொடர்ந்து சுவாமி உள்பிரகாரத்தில் வலம் வந்தது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில், மாலை 6:20 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. முருக பக்தர்கள் அரோகரா கோஷம் போட்டு சாமி தரிசனம் செய்தனர். காடையூர் காடேஸ்வரர் கோவில், பாப்பினி பெரியநாயகியம்மன் கோவில், மடவிளாகம் ஆருத்ரகபாலீஸ்வரர் கோவில், ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவில் உள்ளிட்ட காங்கேயம் வெள்ளகோவில் சுற்றியுள்ள அனைத்து கோயில்களிலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தவிர பொதுமக்கள் தங்களின் வீடுகளிலும் அகல்விளக்குகளை ஏற்றிவைத்து வழிபட்டனர்.